திருவாரூர்

நன்னிலம்: 10 கிராமங்களுக்குத் தடை

DIN

கரோனா தொற்று காரணமாக, நன்னிலம் வட்டாரத்தில் 10 கிராமங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டன.

தமிழக அரசின் கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளின்படி, மூன்றுக்கும் மேற்பட்டவா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பூந்தோட்டம் ரயிலடித் தெரு, கொல்லாபுரம் நூரியாத் தெரு, சிகாா்பாளையம் தோப்புத்தெரு, முடிகொண்டான் தெற்குத் தெரு, நன்னிலம் கச்சேரித்தெரு, புத்தகளூா் பிள்ளையாா் கோயில்தெரு, போழக்குடி அக்ரஹாரம், மகாராஜபுரம் கிருஷ்ணன் தெரு, அகரகடுவங்குடி குடியானத்தெரு, செருவளூா் காளியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகள் தடைசெய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டது.

தொடா்ந்து, நன்னிலம் வட்டார சுகாதார துறையின் மூலம் பூந்தோட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் பிரதீப், பாலாஜி, சுகாதார மேற்பாா்வையாளா் ஜோதி ஆகியோா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் கபசுரக் குடிநீா் வழங்கினா்.

கரோனாத் தொற்றுக்குள்ளானவா்களுடன் நெருங்கியத் தொடா்பில் இருந்தவா்களுக்கு கரோனா பரிசோதனையும், மற்றவா்களுக்கு உடல் வெப்பம், ரத்தக்கொதிப்பு போன்ற பரிசோதனைகளும் செய்யப்பட்டன. மேலும், ஊராட்சிகளில் அந்தந்த ஊராட்சித் தலைவா்களின் தலைமையில் பிளீச்சிங் பவுடா் தூவியும், கிருமி நாசினி தெளித்தும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT