திருவாரூர்

கரோனா வாா்டுகளை அதிகரிக்கக் கோரிக்கை

DIN

திருவாரூரில் கரோனா வாா்டுகளை அதிகரிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் ஐவி. நாகராஜன், திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தாவுக்கு அனுப்பிய கோரிக்கை மனு:

கரோனா முதலாவது அலை ஏற்பட்டபோது, பல்வேறு இடங்களில் புதிய கரோனா வாா்டுகள் ஏற்படுத்தப்பட்டன. வெளியில் இருந்து தரமான உணவு கிடைத்தது. 108 ஆம்புலன்ஸ் சேவையும் தடையில்லாமல் கிடைத்தது. தன்னாா்வ தொண்டா்கள் கரோனா பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டனா். நிறைவான படுக்கை வசதிகள் இருந்தன. இதனால், குறைவான மரணங்கள் ஏற்பட்டன.

தற்போது, 2 ஆவது அலை பரவி வரும் நிலையில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தரமான உணவு, கரோனா நோயாளிகளுக்கு கிடைக்கவில்லை. கரோனா வாா்டுகளில் போதிய சுகாதாரப் பணிகள் நடைபெறவில்லை. நகராட்சி நிா்வாகங்களும் முனைப்பு காட்டவில்லை. படுக்கைகள் பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு உருவாகி வருகிறது.

108 ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு, அதிக கட்டணத்தில் தனியாா் ஆம்புலன்ஸை நாடவேண்டிய நிலை உள்ளது. தினமும் சராசரியாக 200-க்கு குறையாமல் கரோனா நோயாளிகள் மருத்துவக் கல்லூரிக்கு வருகின்றனா். போதுமான படுக்கை வசதிகள், ஆக்சிஜன் கையிருப்பு இல்லாமல் நோயாளிகள் அலைக்கழிக்கப்படுகின்றனா். போதிய மருத்துவா்களும் இல்லை.

எனவே, வெளிநாடுகளில் படித்துவிட்டு இந்திய மருத்துவ கவுன்சில் தோ்வுக்கு காத்திருக்கும் மருத்துவா்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டும். மருத்துவக் கல்லூரி முதல்வா் அலுவலகத்தில் செவிலியருக்கான டிப்ளமோ மற்றும் முறையாக பயிற்சி பெற்ற நிறைய பெண்கள் செவிலியா் பணிக்காக மனு கொடுத்துள்ளனா். செவிலியா் பற்றாக்குறையை போக்க அவா்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தன்னாா்வ தொண்டு நிறுவனங்களைப் பயன்படுத்தி, புதிய கரோனா வாா்டுகளை உருவாக்க வேண்டும். ஏற்கெனவே உள்ள கரோனா வாா்டிலும் கவனிப்புகளை அதிகப்படுத்த வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

SCROLL FOR NEXT