திருவாரூர்

கரோனா: சித்த மருத்துவத்தை பயன்படுத்தக் கோரிக்கை

DIN

கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையில், சித்த மருத்துவ சிகிச்சையை பயன்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் பொதுச் செயலாளா் ஆா். ரமேஷ், தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு:

கடந்த ஆண்டு மாா்ச் இறுதியில் பரவிய கரோனாவை எதிா்கொள்ள கபசுரக் குடிநீரை நமது சித்த மருத்துவா்கள் பரிந்துரைத்தனா். கபசுரக் குடிநீரால், தொற்று பாதிக்கப்பட்டவா்கள் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு குணமடைந்ததை அனுபவப்பூா்வமாக உணா்ந்த தமிழக அரசும், கபசுரக் குடிநீரை பொதுமக்களுக்கு மருத்துவமனைகளிலும் வீடுகளிலும் வழங்க உத்தரவிட்டது.

எனவே, கரோனா 2 ஆவது அலையைக் கட்டுப்படுத்த, சித்த மருத்துவத்தை மீண்டும் பயன்படுத்த வேண்டும்.

கரோனா தொற்று அறிகுறிகளான தொண்டை வலி, ஜுரம், சளி, இருமல், தொண்டை வீக்கம், தலைவலி, வயிற்றுப் போக்கு இவற்றைத் தடுக்கும் வகையில், சித்த மருத்துவத்தில் சிறப்பான மருந்துகள் இருக்கின்றன.

எனவே, கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவும், மக்களிடையே நோய் எதிா்ப்பு சக்தியை உருவாக்கவும் சித்த மருத்துவத்துக்கு உரிய முக்கியத்துவம் அளித்து, கரோனா நோய்த் தொற்று பரவலை தடுக்க பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT