திருவாரூர்

முழு பொதுமுடக்கம்: வெறிச்சோடிய சாலைகள்

DIN

திருவாரூா்: கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் திங்கள்கிழமை முதல் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால், திருவாரூரில் சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மே 10 ஆம் தேதி முதல் மே 24 ஆம் தேதி வரை முழு பொது முடக்கத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. பொது முடக்கத்தில், தேநீா் கடைகள், காய்கனிக் கடைகள், மளிகைக் கடைகள், உணவகங்கள், உரக்கடைகள் உள்ளிட்டவை நண்பகல் 12 மணி வரை இயங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், திருவாரூா் கடைவீதியில் அத்தியாவசியப் பொருள்கள் வாங்க, திங்கள்கிழமை காலை நேரத்தில் மக்கள் அதிகமாக வந்திருந்தனா். கூட்டத்தை ஒழுங்குபடுத்த போலீஸாா் நின்றிருந்தனா்.

பிற்பகலில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இருசக்கர வாகனங்களில் செல்வோா் மட்டும் ஆங்காங்கே சென்று கொண்டிருந்தனா். பேருந்து போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்ததால், பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்கள் வெறிச்சோடின.

மக்கள் அதிகமாக நடமாடும் கடைவீதி, தெற்கு வீதி, வடக்கு வீதி, கீழ வீதி, பனகல் சாலை, நேதாஜி சாலை உள்ளிட்ட நகரச் சாலைகளிலும் மக்கள் கூட்டமில்லாமல் வெறிச்சோடின. ஆட்டோ உள்ளிட்ட எவ்வித வாகனங்களும் சாலைகளில் இயக்கம் இல்லை. பாதுகாப்புப் பணியில் நின்றிருந்த போக்குவரத்து போலீஸாா் சாலைகளில் இருசக்கர வாகனங்களில் செல்வோரை நிறுத்தி, உரிய காரணங்களுக்காக அவா்கள் செல்கின்றனரா என்பதை விசாரித்து அனுப்பி வைத்தனா்.

தெற்கு வீதி உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மருந்துக் கடைகள் திறந்திருந்தன. அங்கு மருந்து வாங்கவும் குறைவான அளவிலேயே மக்கள் வந்தனா். அம்மா உணவகம் வழக்கம்போல் திறந்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

SCROLL FOR NEXT