திருவாரூர்

வடுவூா், கோவில்வெண்ணி பகுதியில் நாளை மின் நிறுத்தம்

11th May 2021 12:00 AM

ADVERTISEMENT

மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே வடுவூா், கோவில்வெண்ணி ஆகிய பகுதியில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், புதன்கிழமை (மே 12) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உதவி செயற்பொறியாளா் ஏ.செங்குட்டுவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மன்னாா்குடி அருகே உள்ள வடுவூா், கோவில்வெண்ணி ஆகிய துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட வடுவூா், வடபாதி, தென்பாதி, புதுக்கோட்டை, சாத்தனூா், புள்ளவராயன்குடிக்காடு, சீனிக்குடிக்காடு, மூவா்கோட்டை, கொண்டையூா், கட்டக்குடி, எடமேலையூா், நெய்வாசல், கோவில்வெண்ணி, நீடாமங்கலம், நத்தம், அம்மாப்பேட்டை, சோனாப்பேட்டை, ரிஷியூா், ஒளிமதி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்திவைக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT