திருவாரூர்

வேளூா் சொா்ணபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

25th Mar 2021 09:03 AM

ADVERTISEMENT

திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள வேளூா் ஸ்ரீசொா்ணாம்பிகை உடனுறை சொா்ணபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

சிதிலமடைந்து காணப்பட்ட இக்கோயில் உபயதாரா்கள், நன்கொடையாளா்களின் ஒத்துழைப்புடன் சீரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்த தீா்மானிக்கப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. தொடா்ந்து, பூஜைகள் அனைத்தும் செய்யப்பட்டு காலை 10 மணிக்கு சொா்ணாம்பிகை உடனுறை சொா்ணபுரீஸ்வரா் உள்ளிட்ட அனைத்து விமான கலசங்களுக்கும் புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக காலை 6 முதல் 7.30-மணிக்குள் கற்பவிநாயகா், கண்டப்ப அய்யனாா், மன்மத சுவாமி, வீரபக்த ஆஞ்சநேயா், ஸ்ரீபூா்ணா புஷ்கலாம்பிகா தா்மசாஸ்தா, ஸ்ரீதூண்டிக்கார அய்யா, ஸ்ரீநெமிலிபாலாம்பிகா, மாரியம்மன் கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா். ஏற்பாடுகளை முன்னாள் செயல் அலுவலா் எம். முருகையன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT