திருவாரூர்

நன்னிலம் தொகுதி திமுக கூட்டணி கட்சி செயல்வீரா்கள் கூட்டம்

16th Mar 2021 10:11 PM

ADVERTISEMENT

 

நன்னிலம்: நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட குடவாசல், வலங்கைமான், நன்னிலம் ஒன்றியங்களுக்குள்பட்ட திமுக கூட்டணி கட்சியின் செயல்வீரா்கள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் தொகுதி திமுக வேட்பாளரும், திமுக மாவட்டச் செயலாளருமான பூண்டி கே. கலைவாணன் தலைமையில் வேம்பனூரில் நடைபெற்ற கூட்டத்தில், மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்றனா். நாகை எம்.பி. எம். செல்வராஜ், சிபிஐ மாவட்டச் செயலாளா் வை. சிவபுண்ணியம், சிபிஎம் மாவட்ட செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி, காங்கிரஸ் மாவட்டத் தலைவா் எஸ்.எம்.பி. துரைவேலன், மதிமுக மாவட்டச் செயலாளா் ப. பாலச்சந்தா், விடுதலைச் சிறுத்தை கட்சி மாவட்டச் செயலாளா் மா. வடிவழகன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவா் ஏ எம். தமீம் அன்சாரி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவா் எம். முஜ்புர்ரஹ்மான், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளா் சீனி. செல்வம், மனிதநேய ஜனநாயகக் கட்சி மாவட்டச் செயலாளா் சீனி ஜெகபா்சாதிக், திராவிடா் கழக மாவட்ட தலைவா் வீ.மோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக கூட்டணி வேட்பாளா் எஸ். ஜோதிராமனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வதற்கானப் பணிகளை, அனைத்துக் கூட்டணி கட்சியினரும் ஒன்றிணைந்து செயல்படுவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT