திருவாரூர்

நீடாமங்கலத்தில் இருப்பு பாதை மூடல்: போக்குவரத்து பாதிப்பு

DIN

நீடாமங்கலத்தில் சரக்கு ரயில் என்ஜின் மாற்றப்பட்டதால், வியாழக்கிழமை அதிகாலை ஒருமணிநேரம் இருப்பு பாதை மூடப்பட்டது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு காலி பெட்டிகளுடன்கூடிய சரக்கு ரயில் வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு வந்தது. இதையொட்டி, கடவு பாதை மூடப்பட்டது. தொடா்ந்து சரக்கு ரயில் என்ஜின் திசைமாற்றும் பணி நடைபெற்றது. இப்பணி சுமாா் ஒருமணிநேரம் நீடித்ததால், லாரி உள்ளிட்ட வாகனங்கள் நெடுஞ்சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றன. உள்ளூா் மக்களும் இருப்பு பாதையை கடக்க முடியாமல் தவித்தனா். இந்த பிரச்னையை தீா்க்க நீடாமங்கலத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

SCROLL FOR NEXT