திருவாரூர்

கூத்தாநல்லூர் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

25th Jun 2021 05:08 PM

ADVERTISEMENT

கூத்தாநல்லூரில் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்றுக் கொண்டனர். 

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர், கம்பர் தெரு, ஈஎஸ்ஏஆர் மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு, மிட்டவுன் ரோட்டரி சங்க நிறுவனர் டாக்டர் வி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். ரோட்டரி சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.ஜவஹர் முன்னிலை வகித்தார். எதிர்காலத் தலைவர் சி.குருசாமி வரவேற்றார். கூத்தாநல்லூர் ரோட்டரி சங்கத்திற்கு, கூத்தாநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலாளரும், ஈஎஸ்ஏஆர் மெட்ரிக்., பள்ளியின் தாளாளருமான வி.எஸ். வெங்கடேசன் தேர்வு செய்யப்பட்டு, கூத்தாநல்லூர் ரோட்டரி சங்கத்தின் புதிய சாசனத் தலைவர் பதவியை, மாவட்ட ஆளுனர் ஆர்.பாலாஜி பாபு அறிவித்து, அதற்கான சான்றிதழையும் வழங்கினார். 

தொடர்ந்து, சாசனச் செயலாளர் ஜெ.சுவாமிநாதன், சாசனப் பொருளாளர் ஏ.சண்முகம், துணைத் தலைவர் கே.ரவிச்சந்திரன், இணைச் செயலாளர் சாம்பு அய்யப்பன் மற்றும் 8 இயக்குநர்கள், 13 உப குழுத் தலைவர்கள் உள்ளிட்ட 24 பேருக்கும், துணை ஆளுனர் ஜி.மனோகரன் பதவியேற்று வைத்தார். விழாவில், சாசனத் தலைவர் வெங்கடேசன் பேசியது, நாம் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் எவ்வளவு உதவிகள்  செய்திருந்தாலும், உலகளாவிய ரோட்டரி சங்கம் மூலம் செய்யக் கூடிய உதவிகள் உலக அளவில் சென்றடைகிறது. கூத்தாநல்லூர் நகர வளர்ச்சிக்காக ரோட்டரி சங்கம் சார்பில், அனைவரும் பெரும் உறுதுணையாக இருப்போம். மாணவ, மாணவிகளின் கல்வி திறன் மேம்பட வைப்போம். 

ADVERTISEMENT

ரோட்டரி சங்கத்தில் புதிய உறுப்பினர்கள் அதிக அளவில் சேர்க்கப்படும் என்றார். தொடர்ந்து, மாவட்ட ஆளுனர் பாலாஜி பாபு பேசியது. உலகத்திலேயே மிகப் பழமையான அமைப்பு, சங்கம் என்றால், அது ரோட்டரி சங்கம்தான்.  116 ஆண்டுகளைக் கடந்த ரோட்டரி சங்கம், 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ளது. ரோட்டரி சங்கம் மூலம் உலகத்தில் போலியோவை முழுவதுமாக ஒழிக்கப்பட்டுள்ளது. மனிதாபிமானம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மிக மிக முக்கியமானதாகும். அன்பும், அறனும் மனிதர்களுக்காகப் படைக்கப்பட்டது. நம்முடைய வாழ்க்கையில் உதவிகள் செய்வதற்கும், சேவை செய்வதற்கும்மான வழிகாட்டுதல்தான் ரோட்டரி அமைப்பு என்றார். 

கரோனா தொற்று விதிமுறைகளால், அனைவரும் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றப்பட்டு, விழா நடத்தப்பட்டன. விழாவில், மாவட்டப் பொறுப்பாளர் எம்.நடராஜன், முன்னாள் உதவி ஆளுனர் கே.திருநாவுகரசு, மண்டலச் செயலாளர் ஜி.சிவக்கொழுந்து, முன்னாள் தலைவர் என்.சாந்தகுமார், உடனடி முன்னாள் தலைவர் பி.ரமேஷ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர்கள் ( லெட்சுமாங்குடி ) எம்.உதயகுமார், ( கூத்தாநல்லூர் ) டி.எம்.பஷீர் அஹம்மது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


 

Tags : Tiruvarur
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT