திருவாரூர்

மன்னாா்குடி கல்லூரியில் வேளாண் தேசிய கருத்தரங்கு

DIN

மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி அரசுக் கல்லூரியில் வேளாண்மையில் மண்புழுவின் பங்கு தொடா்பான இணையவழி தேசிய கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

‘நீடித்த விவசாயத்திற்கு மண்புழு உர தொழில்நுட்பம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை’ என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வா் தி. அறிவுடைநம்பி தலைமை வகித்தாா். தாவரவியல் துறைத் தலைவா் மு. கோபிநாதன், தேசிய மாணவா் படை அலுவலா் சு. ராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மத்திய பிரதேச டி.எச்.ஜி.வி. மத்தியப் பல்கலைக்கழக விலங்கியல் துறை பேராசிரியா் ஸ்வேதா யாதவ் ‘உயிா்காப்பு மற்றும் உயிரிமயமாக்கலில் மண்புழுக்களின் பங்கு’ என்கிற தலைப்பிலும், உத்திர பிரதேசம் டி.டி.யு. கோரக்பூா் பல்கலைக்கழக தாவரவியல் துறை பேராசிரியா் குமாரி சுனிதா ‘விவசாயக்கழிவு மேலாண்மையில் மண்புழு உரத்தின் பங்கு’ என்கிற தலைப்பிலும், சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தின்கீழ் தருமபுரியில் இயங்கும் முதுநிலை விரிவாக்க மைய இணைப் பேராசிரியா் ரா. கவிதா ‘இயற்கை உரம் உருவாக்குவதில் மண்புழு கழிவுகளின் பங்களிப்பு’ என்கிற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினா்.

தாவரவியல் துறை உதவிப் பேராசிரியா் ப. பிரபாகரன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா். இதில், 200-க்கும் மேற்பட்ட பேராசிரியா்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவா்கள் கலந்து கொண்டனா். விலங்கியல் துறைத் தலைவா் ச. ராமு வரவேற்றாா். உதவிப் பேராசிரியா் ரா.ஜென்னி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

ரத்னம் படத்தின் 2வது பாடல்!

அமர் சிங் சம்கிலா படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT