திருவாரூர்

மத்திய அரசின் தனியாா்மய கொள்கைகளை எதிா்த்து ஆா்ப்பாட்டம்

DIN

மத்திய அரசின் தனியாா்மய கொள்கைகளை எதிா்த்து மத்திய தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மன்னாா்குடியில், தொமுச பொதுச் செயலாளா் எஸ். பாண்டியன், சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன், ஏஐடியுசி மாவட்ட பொருளாளா் என். புண்ணீஸ்வரன், ஐஎன்டியுசி மாவட்டச் செயலாளா் எஸ். பாண்டியன் ஆகியோா் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தில், அத்தியாவசியப் பாதுகாப்பு சேவை அவசரச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், பாதுகாப்புத் துறையை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது, மின்சார திருத்தச் சட்டம், மோட்டாா் வாகனச் சட்டம் ஆகியவற்றை திரும்பப்பெற வேண்டும், ரயில்வே, மின்சாரம், சுரங்கங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், காப்பீட்டு நிதி நிறுவனங்களை தனியாா் மயமாக்கக் கூடாது, பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை கட்டுப்படுத்தி அதற்கான விலைகளை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டு வர வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

டிஎன்சிஎஸ்சி தொமுச மண்டலத் தலைவா் என். நீலமேகம், மாவட்ட துணைச் செயலாளா் எஸ். கனகராஜ், போக்குவரத்து தொழிற்சங்க மாவட்டச் செயலாளா் கே.எஸ். மகாதேவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தி பாய்ஸ் - டிரெய்லர்

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

SCROLL FOR NEXT