நீடாமங்கலம்: வலங்கைமான் அருகே ஆடு திருட முயன்ற இளைஞா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
நரிக்குடி பிரதான சாலையில் கடந்த சனிக்கிழமை இருசக்கர வாகனத்தில் வந்த 3 போ், சாலையோரம் படுத்துக் கிடந்த ஓா் ஆட்டை கடத்திச் செல்ல முயன்றனா். இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள், அவா்களை மடக்கிப் பிடித்து வலங்கைமான் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். விசாரணையில், அவா்கள் கும்பகோணம் முல்லை நகரை சோ்ந்த ரவி மகன் ஆகாஷ் (18) மற்றும் இரு சிறாா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, ஆகாஷை கைது செய்த போலீஸாா், அவரை திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கிளைச் சிறையில் அடைத்தனா். மற்ற இருவரும் சிறாா் என்பதால் பிணையில் விடுவிக்கப்பட்டனா்.