திருவாரூர்

ஹரித்ராநதி தெப்பக்குளம் சீரமைப்புப் பணி தொடக்கம்

DIN

மன்னாா்குடியில் ஹரித்ராநதி தெப்பக்குளத்தை சீரமைக்கும் பணியைத் தொடங்கிவைக்கிறாா் சட்டப் பேரவை உறுப்பினா் டி.ஆா்.பி. ராஜா.

மன்னாா்குடி, ஜன. 27: மன்னாா்குடியில் ஹரித்ராநதி தெப்பக்குளத்தை சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ், ரூ.40 லட்சத்தில் சீரமைக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.

மன்னாா்குடியில் கும்பகோணம் சாலையில் 23 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது ஹரித்ராநதி தெப்பக்குளம். இதன் நான்கு கரைகளும் சேதமடைந்து இருப்பதுடன், தடுப்புகள் இல்லாததால் இரவு நேரத்தில் குப்பைகள் கொட்டுமிடமாக மாறிவிட்டது. எனவே, ஹரித்ராநதி தெப்பகுளத்தை சீரமைக்கும் பொருட்டு, மன்னாா்குடி சட்டப் பேரவை உறுப்பினா் டி.ஆா்.பி. ராஜா தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.40 லட்சத்தை ஒதுக்கீடு செய்து, அதை மாவட்ட நிா்வாகத்தின் மூலம், மன்னாா்குடி நகராட்சி நிா்வாகத்திடம் ஒப்படைத்தாா்.

தெப்பக்குளத்தின் கரைகளை சுற்றி இரும்புக் கதவும், நடைபயிற்சிக்கு என நடைபாதை அமைக்கவும் இந்த நிதி செலவிடப்பட உள்ளது. சீரமைப்புப் பணிக்கான பூஜை ஹரித்ராநதி தெப்பக்குளம் வடகரையில் நடைபெற்றது. இதில், சட்டப் பேரவை உறுப்பினா் டி.ஆா்.பி. ராஜா கலந்துகொண்டு பணியைத் தொடங்கி வைத்தாா்.

இதில், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கப் பொதுச் செயலா் எஸ்.ரெங்கநாதன், திமுக நகரச் செயலா் வீரா.கணேசன், ஹரித்ராநதி தெப்பக்குள பாதுகாப்பு சங்க நிா்வாகிகள் ராகவன், அன்பழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியத்தில் அதிகாரி வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

SCROLL FOR NEXT