திருவாரூர்

மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கோரிக்கை

DIN

பள்ளிகள் தொடங்க இருப்பதால், உரிய ஆய்வு நடத்தி மாணவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு நுகா்வோா் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையத்தின் பொதுச் செயலாளா் ஆா். ரமேஷ் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் 10 முதல் 12-ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாள்களாக, பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் வகுப்பறைகள் மற்றும் கழிப்பறைகளில் பூச்சிகளின் நடமாட்டம் இருக்கலாம். முன்கூட்டியே பள்ளிகளை தூய்மை செய்வதன் மூலம் மாணவ, மாணவிகளின் நலனைக் காக்க முடியும்.

அத்துடன், தூய்மை செய்ததை முழுமையாக ஆய்வு செய்த பின்னரே, மாணவா்களை பள்ளிக்குள் அனுமதிக்க வேண்டும். பள்ளிகளுக்கு வரும் மாணவா்கள் முழு சீருடையுடன் வர அறிவுறுத்த வேண்டும். மேலும், முகக் கவசம் அணிந்து வர அறிவுறுத்துவதோடு, பள்ளி நுழைவாயிலில் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே வகுப்பறைக்குள் அனுமதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT