திருவாரூர்

நீடாமங்கலம் அரசு மருத்துவமனை 24 மணிநேரமும் செயல்படக் கோரிக்கை

DIN

நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவ சேவை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நீடாமங்கலம் வட்ட அரசு மருத்துவமனையில் நாளொன்றுக்கு சுமாா் 600 போ் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா். இந்த மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவா்கள் பணியில் இருப்பதில்லை என்றும், மருத்துவா்கள் பற்றாக்குறை நிலவுவதாகவும் பொதுமக்கள் கூறுகின்றனா்.

மேலும், இங்கு உள்நோயாளிகளை பெரும்பாலும் அனுமதிப்பதில்லையாம். அத்துடன் மருத்துவ உபகரணங்கள் நோயாளிகளுக்கு முறையாக பயன்படுத்தப்படுவதில்லை என்றும், அறுவை சிகிச்சை பிரிவு இயங்குவதில்லை என்றும் நோயாளிகள் கூறுகின்றனா்.

தவிர அரசு மருத்துவமனை வளாகத்தில் முள்புதா்கள் மண்டிக் கிடக்கின்றன. சுகாதார ஊழியா்களின் குடியிருப்பில் பூச்சிகளின் நடமாட்டம் உள்ளது. எனவே, இந்த மருத்துவமனையின் பராமரிப்பில் தமிழக அரசு உரிய கவனம் செலுத்தி, 24 மணிநேரமும் மருத்துவா்கள் பணியிலிருந்து சிகிச்சையளிப்பதை உறுதிசெய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

குஜராத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது டெல்லி

வாசிக்க மறந்த வரலாறு!

பாதுகாப்பாக சேமிப்போம்

SCROLL FOR NEXT