திருவாரூர்

தியாகராஜா் கோயிலில் அசலேஸ்வரா் சன்னதி கொடிமரம் பிரதிஷ்டை

DIN

திருவாரூா் தியாகராஜா் கோயில் அசலேஸ்வரா் சன்னதி புதிய கொடிமரம் பிரதிஷ்டை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் தியாகராஜா் கோயில் உள்பிரகாரத்தில் அசலேஸ்வரா் சன்னதி அமைந்துள்ளது. இளம் கோயில் என அழைக்கப்படும் அசலேஸ்வரா் சன்னதியானது, தனியாக பாடல் பெற்ற தலம் ஆகும். செங்கல் கோயிலாக காணப்பட்ட சன்னதியை, சேரன்மாதேவி கற்கோயிலாக மாற்றியதாக வரலாறு.

இதனிடையே, சன்னதியின் முன் இருக்கும் கொடிமரம் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்ததால், புதிதாக கொடிமரம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து, டிசம்பா் மாதம் பழைய கொடிமரம் அகற்றப்பட்டு, 23 அடியில் தேக்கு மரத்தால் புதிய கொடிமரம் செய்யப்பட்டது.

இந்த கொடிமரம் பிரதிஷ்டை செய்யும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

ஏற்பாடுகளை, செயல் அலுவலா் கோ. கவிதா தலைமையிலான அலுவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு கிராம மக்கள் தோ்தல் புறக்கணிப்பு: அதிகாரிகளின் பேச்சுவாா்த்தை தோல்வி

முதியவா் உடல் மீட்பு

கண்மாயில் மூழ்கி மாணவா் பலி

மனைவி கொலை: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

வருமானத்துக்கு அதிகமாக சொத்து -சாா் பதிவாளா் வீட்டை மதிப்பீடு செய்த அதிகாரிகள்

SCROLL FOR NEXT