திருவாரூர்

கூத்தாநல்லூர்: பல்வேறு கோயில்களில் புத்தாண்டு சிறப்பு பூஜை 

2nd Jan 2021 06:40 PM

ADVERTISEMENT

கூத்தாநல்லூர் வட்டத்தில், புத்தாண்டை முன்னிட்டு பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. 
திருவாரூர் மாவட்டம், லெட்சுமாங்குடி கல்யாணசுந்தரேஸ்வரர் கோயிலில் மூலவர் கல்யாண சுந்தரேஸ்வரர், மங்களாம்பிகைக்கும், பண்டுதக்குடியில் எழுந்தருளியுள்ள வாஸலாம்பிகா சமேத உமாபதீஸ்வரர், வேளுக்குடியில் அமைந்துள்ள பழமை வாய்ந்த கோயிலான ருத்ரகோட்டீஸ்வரர் கோயில் சிவ பெருமானுக்கும், அதிகாரந்திக்கும், பாலாபிஷேகம் செய்யப்பட்டன. 

வேளுக்குடி ருத்ரக் கோட்டீஸ்வரர்.

இதே, பேரில், லெட்சுமாங்குடி கம்பர் தெரு நீலகண்டேஸ்வரர் கோயில், காக்கையாடியில் கைலாசநாதர் கோயில், சாத்தனூரில் காலகஸ்த்தீஸ்வரர் கோயில், திருராமேஸ்வரத்தில் ராமநாத சுவாமி, அதங்குடியில் விருப்பாட்சிஸ்வர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் எழுந்தருளியுள்ள மூலவருக்கு, மஞ்சள் பொடி, தயிர், பன்னீர், தேன், பால், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட அனைத்து திரவியங்களாலும் அபிஷேகம் செய்யப்பட்டன. 

ADVERTISEMENT

வேளுக்குடி அதிகார நந்தி பகவான்.

அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டன. ஏராளமான பக்தர் சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Tiruvarur
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT