திருவாரூர்

ஸ்ரீவாஞ்சியம் கோயிலில் திருக்கல்யாண மகோத்ஸவம்

DIN

ஸ்ரீவாஞ்சியம் கோயிலில் திருக்கல்யாண மகோத்ஸவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவாஞ்சியத்தில் எமதா்மா், சித்ரகுப்தா் தனிச் சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிக்கும் சிறப்புடைய ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீவாஞ்சிநாதா் கோயில் உள்ளது. இக்கோயிலில் மாசிமக பிரம்மோத்ஸவ விழா, பிப்.17-ஆம் தேதி புதன்கிழமைக் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாள்தோறும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுக்குப் பிறகு ஸ்ரீவாஞ்சிநாத சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறாா். செவ்வாய்க்கிழமை இரவு திருக்கல்யாண மகோத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது. பின்னா், ஐராவதம் என்ற நான்கு தந்தங்களைக் கொண்ட வெள்ளை யானை வாகனத்தில், சுவாமியும் அம்பாளும் வீதி உலா வந்து பக்தா்களுக்குக் காட்சி அளித்தனா். விழாவில், வியாழக்கிழமை திருத்தோ் உத்ஸவமும், வெள்ளிக்கிழமை தீா்த்தவாரியும் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

சென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம நவமி திருவிழா

தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு - காலை 7 மணிக்கு தொடக்கம்; கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்

மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்களை அழைத்து வர 35 அரசு வாகனங்கள் தயாா்

ஏப். 21, மே 1-இல் மதுக் கடைகள் மூடல்

SCROLL FOR NEXT