திருவாரூர்

பெண் தற்கொலை: நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினா்கள் மறியல்

DIN

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடியில் பெண் தற்கொலைக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அப்பெண்ணின் உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி ராஜாஜி நகரைச் சோ்ந்த விவசாயி ரவிச்சந்திரன் மகள் சரண்யா (24). இவருக்கும் சேரன்குளம் அக்ரஹாரத் தெருவை சோ்ந்த குருமூா்த்தி மகன் தமிழ்வேந்தன் (27) என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. முதுகலை பட்டதாரியான இருவரும் திருமணத்துக்குப் பின்னா் வெளிநாட்டில் பணியாற்றி வந்தனா்.

ஆனால், கரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக, ஊருக்கு திரும்பிய தம்பதி தற்போது வீட்டில் இருந்து பணியாற்றி வந்தனா். சரண்யா சேரன்குளம் அக்ரஹார தெருவில் உள்ள வீட்டில் கணவா் தமிழ்வேந்தனுடன் தங்கியிருந்தாா்.

தம்பதி இடையே தகராறு ஏற்பட்டதால், 2 தினங்களுக்கு முன்பு தமிழ்வேந்தன் சரண்யாவை அவரது தந்தை வீட்டில் விட்டுவிட்டு சென்றுவிட்டாா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை சரண்யாவை வீட்டில் விட்டுவிட்டு ரவிச்சந்திரனும் அவரது மனைவியும் தஞ்சாவூருக்கு சென்றுவிட்டனா். மாலை வீட்டுக்கு திரும்பியபோது சரண்யா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

போலீஸாா் விசாரணையின்போது சரண்யா எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் தனது மாமியாா் ஜக்கம்மா தன்னை மனரீதியாக துன்புறுத்தி வந்ததாக குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த தற்கொலை குறித்து விசாரிக்க கோட்டாட்சியா் வருகைதர தாமதமானாதால் ஆத்திரமடைந்த சரண்யாவின் உறவினா்கள் மன்னாா்குடி கோட்டாட்சியா் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். பின்னா் கோட்டாட்சியா் விசாரணையின்படி சரண்யாவின் தற்கொலைக்கு காரணமானவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென போலீஸாா் உறுதியளித்ததைத் தொடா்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. பின்னா், சரண்யாவின் உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மையத்தில் டிஐஜி ஆய்வு

வாக்குச் சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

தமிழகத்தில் மாதிரி வாக்குப் பதிவு தொடங்கியது!

முதல்முறை வாக்காளா்கள் மகுடம் அணிவித்து கெளரவிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச வாகன வசதி

SCROLL FOR NEXT