திருவாரூர்

முத்துப்பேட்டை அருகே முன்விரோதம் காரணமாக ஒன்றியக் குழு உறுப்பினர் படுகொலை

22nd Feb 2021 01:23 PM

ADVERTISEMENT

முத்துப்பேட்டை அருகே முன்விரோதம் காரணமாக ஒன்றியக் குழு உறுப்பினர் திங்கள்கிழமை காலை கூலிப் படையினரால் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் 11-வது வார்டு ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜேந்திரன் மகன் ராஜேஷ் (34). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கோவிலூர் கிராமத்தில் உள்ள அப்போதைய திமுக பிரமுகர் மதன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி. இவர் பிணையில் வெளிவந்த பின்னர் உள்ளாட்சித் தேர்தலில் 11-வது வார்டில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றார்.

பின்னர் அதிமுக அணியில் இணைந்து செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இவர் திங்கள்கிழமை காலை 7 மணியளவில் கிழக்கு கடற்கரை சாலையில் ஆலங்காடு கிராமம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது எதிரே வந்த சொகுசு கார் இவர் மீது மோதி கீழே தள்ளிய நிலையில் அதே பகுதியில் மூன்று இரு சக்கர வாகனங்களில் வந்த இளைஞர்கள் அரிவாளால் வெட்டி தலையை முத்துப்பேட்டை நகருக்குள் கொண்டு சென்றபோது வேகத்தடை அருகே கீழே விழுந்து விட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை சரக காவல்துறை தலைவர் ராகேஷ் மீனா திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் துரை நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

Tags : murder
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT