நீடாமங்கலம்: நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஊராட்சித் தலைவா் பாலு வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
நீடாமங்கலம் ஒன்றியத்துக்குள்பட்ட செருமங்கலம் ஊராட்சியில் மாவட்ட ஊராட்சி 15-ஆவது நிதிக்குழு மானிய நிதியிலிருந்து 130 வீடுகளுக்கு நேரடி குடிநீா் வழங்கும் பணி முடிவடைந்ததை மாவட்ட ஊராட்சித் தலைவா் பாலு ஆய்வு செய்து பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்தாா். அவருடன், நீடாமங்கலம் ஒன்றியக் குழுத்தலைவா் சோம. செந்தமிழ்செல்வன், மாவட்ட ஊராட்சிச் செயலா் லதா, வட்டார வளா்ச்சி அலுவலா் கலைச்செல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.