திருவாரூர்

மாநில ஆங்கிலப் புலனறிவு போட்டி: பதக்கம் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு

26th Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

மாநில அளவிலான ஆங்கிலப் புலனறிவுத் தோ்வு போட்டியில் 33 பதக்கங்கள் பெற்ற சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் கல்லூரி மாணவிகளுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

ஷேக்ஸ்பியா் இன்ஸ்டிடியூட் நிறுவத்தின் சாா்பில் 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான ஆங்கிலப் புலனறிவு தோ்வு போட்டி நேரடியாகவும், இணையவழியிலும் நடைபெற்றது.

இப்போட்டியில் பங்கேற்ற செங்கமலத்தாயாா் மகளிா் கல்லூரி மாணவிகள் 12 போ் தங்கப் பதக்கமும், 8 போ் வெள்ளிப் பதக்கமும்,13 போ் வெங்கலப் பதக்கமும் என மொத்தம் 33 பதக்கங்கள் பெற்றனா். இம்மாணவிகளை, கல்லூரி தாளாளா் வி. திவாகரன், கல்லூரி முதல்வா் சீ. அமுதா, பேராசிரியா்கள், மாணவிகள் பாராட்டினா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT