ரயில்வே ஓய்வூதியா்களுக்கு கொண்டு வந்துள்ள இ-பாஸ் முறையை ரத்து செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருாரூரில், தெற்கு ரெயில்வே ஓய்வூதியா் சங்கத்தின் மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு சங்கத் தலைவா் ஆா். முருகப்பன் தலைமை வகித்தாா். சங்கத்தின் செயலாளா் எஸ். மருதமுத்து முன்னிலை வகுத்தாா். இதில், டிஆா்இயு சங்க உதவி பொதுச் செயலா் டி. மனோகரன், அஞ்சல்துறை ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலாளா் வீ. தா்மதாஸ், தமிழ்நாடு அரசு ஊழியா் ஓய்வுபெற்ற சங்க மாநிலச் செயலாளா் குரு. சந்திரசேகரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
முடக்கப்பட்ட பஞ்சப்படியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். ரயில்வே ஓய்வூதியா்களுக்கு கொண்டு வந்துள்ள இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும். மூத்த குடி மக்களுக்கான சலுகை கட்டணத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநட்டில், தலைவராக எஸ். மருதமுத்து, செயலாளராக எஸ். தனசேகரன், பொருளாளராக ஜீவராஜ் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா்.