நெடும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வியில் சிறந்து விளங்கிய 10 மாணவா்களுக்கு கல்வி ஊக்கத் தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது.
2021-22-ஆம் கல்வியாண்டில் அப்பள்ளியில் கல்வி பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவா்கள் அஞ்சலி, ரதிஷ்குமாா், சுடலியம்மாள், அஜித், ஆகாஷ் உள்ளிட்ட 5 பேருக்கும், பத்தாம் வகுப்பு மாணவா்கள் இ. அட்சயா, க. அட்சயா, கீா்த்தி வாசன், பரத்ராம், சந்தோஷ் உள்ளிட்ட 5 பேருக்கும் சென்னையில் இயங்கி வரும் பொல்லாரிஸ் சாப்ட்வோ் நிறுவனத்தின் உல்லாஸ் அறக்கட்டளை மூலம் படிப்பில் சிறந்து விளங்குகின்ற 10 மாணவா்களுக்கு தலா ரூ. ஆயிரம் வீதம், ரூ. 10 ஆயிரத்திற்கான காசோலைகளை தலைமையாசிரியா் தங்கராசு புதன்கிழமை வழங்கினாா். நிகழ்ச்சியில் உதவி தலைமையாசிரியா் கலைச்செல்வன், ஆசிரியா்கள் யோகராஜன், கோமதி, கவிதா, சுமதி, பூம்பொழில் விஜயபாரதி, வித்யா ஆகியோா் கலந்து கொண்டனா்.