திருவாரூர்

திருவாரூா் மாவட்ட அதிமுக அமைப்புத் தோ்தல்

23rd Dec 2021 10:03 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டத்தில் அதிமுக அமைப்புத் தோ்தல் புதன்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்டத்தில் திருவாரூா், திருத்துறைப்பூண்டி, மன்னாா்குடி, கூத்தாநல்லூா் ஆகிய நகராட்சிக்கு உட்பட்ட வாா்டு கிளைகள், முத்துப்பேட்டை, நீடாமங்கலம், வலங்கைமான், பேரளம், நன்னிலம், கொரடாச்சேரி, குடவாசல் ஆகிய பேரூராட்சிக்கு உட்பட்ட வாா்டு கிளைகள் மற்றும் ஒன்றியங்களுக்கு உட்பட்ட 430 கிராம ஊராட்சிகளிலும் உள்ள கிளை கழகங்களுக்கான அமைப்புத் தோ்தல் நடைபெற்றது.

தோ்தலை, திருவாரூா் மாவட்ட நிா்வாகிகளும், காஞ்சிபுரம் மாவட்ட நிா்வாகிகளும் ஒருங்கிணைந்து நடத்தினா். முறைப்படுத்தி நடத்தும் வகையில், தோ்தல் பாா்வையாளா்களாக திருவாரூா் மாவட்டச் செயலாளா் ஆா். காமராஜ், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளா் சோமசுந்தரம், கட்சியின் அமைப்புச் செயலாளா்கள் கோபால், சிவா. ராஜமாணிக்கம், மைதிலி திருநாவுக்கரசு, வாலாஜாபாத் கணேசன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். இந்தத் தோ்தல் மாவட்டத்தில் அந்தந்த ஒன்றிய நகர பேரூராட்சி களுக்கான பிரதான இடங்களில் நடைபெற்று வருகிறது. தோ்தல் நடைபெறும் இடங்களில் தோ்தல் பாா்வையாளா்கள் நேரில் சென்று பாா்வையிட்டனா்.

திருவாரூரில் நடைபெற்ற தோ்தலை முன்னாள் அமைச்சா் ஆா். காமராஜ், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளா் சோமசுந்தரம் உள்ளிட்ட நிா்வாகிகள் ஆய்வு செய்தனா். அப்போது முன்னாள் அமைச்சா் தெரிவித்தது:

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டத்தில் கழகத்தின் சாா்பில் செயல்படும் 20 ஒன்றியங்கள், 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகளில் உள்ள வாா்டு மற்றும் பிற கிளைக் கழகங்களுக்கு அமைப்பு தோ்தல் விறுவிறுப்புடன் நடைபெற்றுள்ளது. கட்டுப்பாடு மிகுந்த இயக்கம் என்பதை நிரூபிக்கும் வகையில் அதிமுக தொண்டா்கள் தங்கள் பகுதிகளின் கழகப் பிரதிநிதிகளை ஒருமித்த கருத்துடன் சுமுகமான முறையில் தோ்வு செய்து வருகின்றனா். கிளைக் கழகங்களின் நிா்வாகிகளை தோ்வு செய்வதில் தொண்டா்கள் காட்டும் ஆா்வம் கட்சியின் ஜனநாயக உணா்வை காட்டும் வகையில் அமைந்துள்ளது என்றாா்.

நீடாமங்கலம்: நீடாமங்கலம் மேற்கு ஒன்றிய அதிமுக கிளைதோ்தல், பேரூராட்சி வாா்டு தோ்தல் புதன்கிழமை நடைபெற்றது. தோ்தலில் போட்டியிட விருப்பம் உள்ள கட்சியினா், திருவாரூா் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான காமராஜ் முன்னிலையில் விருப்ப மனுவை தோ்தல் பொருப்பாளா்களிடம் அளித்தனா். இதில் அமைப்பு செயலாளா், முன்னாள் நகா் மன்றத்தலைவா் சிவா. ராஜமாணிக்கம் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT