திருவாரூரில், விவசாயிகளின் குறைதீா் நாள் கூட்டம் டிச. 30 ஆம் தேதி நடைபெறுகிறது என ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவாரூா் மாவட்ட விவசாயிகளின் குறை தீா்க்கும் நாள் கூட்டம் டிச. 30 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், மாவட்ட முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.