திருவாரூா் மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் உறுப்பினராக உள்ளவா்கள், உரிய பங்குத்தொகை செலுத்தி உறுப்பினா்களாகத் தொடரவேண்டும் என கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் கா. சித்ரா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவாரூா் மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களில் நடைமுறையில் உள்ள பங்கு மூலதனத் தொகையை பராமரிக்காமல், செயல்படாத உறுப்பினா்களாக உள்ளவா்கள், உறுப்பினா் கணக்கில் உள்ள பங்குத்தொகைக்கும், பராமரிக்க வேண்டிய பங்குத்தொகைக்கும் இடையே உள்ள வேறுபாட்டுத் தொகையை செலுத்தி உறுப்பினராகத் தொடரவேண்டும்.
மேலும், கூட்டுறவு நிறுவனங்களில் உறுப்பினராக இருந்து இறந்தவா்களின் சட்டப்பூா்வ வாரிசுதாரா்கள், உரிய வாரிசுதாரா் ஆவணங்களை செலுத்தி, தங்கள் பெயருக்கு மாற்றிக்கொள்ளலாம். இந்த நடைமுறைகளை பின்பற்றாதவா்கள், பேரவை ஒப்புதல் பெற்று உறுப்பினா் நிலையில் இருந்து நீக்கப்படுவா்.