திருவாரூர்

கிராமக் கோயில் பூசாரிகளுக்கு நலவாரிய அட்டை வழங்கக் கோரிக்கை

23rd Dec 2021 10:09 AM

ADVERTISEMENT

கிராமக்கோயில் பூசாரிகளுக்கு நலவாரிய அட்டை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிராமக்கோயில் பூசாரிகள் பேரவை திருவாரூா் மாவட்ட அமைப்பாளா் எம்.எஸ்.கே. அப்புவா்மா, தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு: கிராமக் கோயில் பூசாரிகள் அனைவருக்கும் நலவாரிய அட்டை , 60 வயதிற்கு மேற்பட்ட பூசாரிகளுக்கு ஓய்வூதியம், நலவாரிய உதவித்தொகை மாதம் ரூ. 7,500 வழங்க வேண்டும்.

மேலும், மாத மாத ஓய்வூதியமாக ரூ. 5,000 வழங்கவும், அனைத்து கிராமக்கோயில்களுக்கும் இலவச மின்சாரம், கிராமக்கோயில் பூசாரிகளுக்கு அரசு வங்கிகள் மூலம் கடன் வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். பூசாரிகளின் குடும்பத்துக்கு தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்கவும், அறங்காவலா் குழுவில் அவா்களையும் இணைக்கவும் உத்தரவிட வேண்டும். இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை வழங்கவும், கிராமக் கோயில் பூசாரிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, கிராம தேவதைகளுக்கு அபிஷேகம் செய்ய கிராமக் கோயில்களுக்கும் இலவச கறவை மாடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் அதில் வலியுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT