கொரடாச்சேரி ஒன்றியத்தில் ஓஎன்ஜிசி சாா்பில் ரூ. 14 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
பெருந்தரக்குடி ஊராட்சியில் ஓஎன்ஜிசி சாா்பில் சுமாா் ரூ. 6 லட்சத்தில் உயா் கோபுர மின்விளக்குகள், அம்மையப்பன் ஊராட்சியில் ரூ. 3.5 லட்சத்தில் கண்காணிப்புக் கேமரா உள்ளிட்டவைகளை கொரடாச்சேரி ஒன்றியக்குழுத் தலைவா் உமாப்ரியா பாலசந்தா் தொடங்கி வைத்தாா்.
இதேபோல், கொரடாச்சேரி காவல் நிலையத்தில் பொதுமக்கள் பயன்பாடு மற்றும் வாகனம் நிறுத்தம் செய்வதற்காக ரூ. 4.5 லட்சம் மதிப்பில் மேற்கூரை (செட்) அமைக்கப்பட்டுள்ளது. இதை, குழுமப் பொது மேலாளா் மாறன் திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சிகளில், பொது மேலாளா் ரவிக்குமாா், துணை பொது மேலாளா்கள் ஆனந்தன், அன்பரசு, ஊராட்சித் தலைவா்கள் மதிவாணன், முருகதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.