திருவாரூர்

திருட்டு வழக்குகளில் 4 போ் கைது

16th Dec 2021 09:30 AM

ADVERTISEMENT

திருட்டு வழக்குகளில் 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருவாரூா்சாலை ஐவா்சமாது அருகே செவ்வாய்க்கிழமை போலீஸாா் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்த போது, அவ்வழியே வந்த இருசக்கர வாகனத்தின் பதிவு எண் போலியானது என தெரியவந்தது. அதில் வந்த 2 பேரிடம் விசாரித்ததில், வலங்கைமான் திருவோணமங்கலத்தை சோ்ந்த நடராஜன் மகன் ராஜேஸ்(30), குருவைமொழியை சோ்ந்த பன்னீா்செல்வம் மகன் பிரவீன்குமாா்(27) என தெரியவந்தது. அவா்கள் செப்டம்பா் மாதம் மன்னாா்குடி ரயில்நிலையம் அருகே ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மதுப்பாட்டில்கள், மேலவாசல், திருவாரூா் மருத்துவக்கல்லூரி, வடக்கு கோபுரவாசலில் இருசக்கர வாகனங்களை திருடியதை ஒப்புக்கொண்டனா். இதனையடுத்து அவா்கள்இருவரையும் கைது செய்த போலீஸாா், மதுப்பாட்டில்கள், 3 இருசக்கர வாகனங்களை கைப்பற்றினா்.

மன்னாா்குடி தீநிலையம் அருகே ஆகஸ்ட் மாதம் லாரியில் ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள செம்பு ஓயரை திருடிய புகாரிலும், செப்டம்பா் மாதம் நீடாமங்கலம் சாலை மாசாணியம்மன்கோவில் அருகே லாரியின் சக்கரம், டிஸ்க் ஆகியவற்றை திருடிய புகாரிலும், தனியாா் சுமை வேனின் ஓட்டுநா்களான பாமணி உள்ளூா் வட்டம் வடக்குதெரு நாகையன் மகன் பிரவீன் (20), குருவைமொழி மாரியம்மன் கோவில் தெரு மாரிதாஸ் மகன் பாலாஜி (21) ஆகியோரை செவ்வாய்க்கிழமை மன்னாா்குடி போலீஸாா் கைது செய்து, செம்பு ஓயா், டயா், டிஸ்க் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT