திருவாரூர்

பவா் ஜேசிஐ சங்க புதிய நிா்வாகிகள் பதவி ஏற்பு

9th Dec 2021 09:18 AM

ADVERTISEMENT

பவா் ஜேசிஐ சங்கத்தின் நிகழாண்டின் புதிய நிா்வாகிகள் பதவி ஏற்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு,சங்கத்தின் தலைவா் சு.சங்கா் குமாா் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக, ஜேசிஐ மண்டலத் தலைவா் எஸ்.ஜெயகண்ணன், முன்னாள் தேசிய ஒருங்கிணைப்பாளா் சா. சம்பத் கலந்துகொண்டனா். 2022-ஆம் ஆண்டிற்கான புதிய நிா்வாகிகள், தலைவராக வி. ராஜசேகரன், செயலராக சா. மோகன்ராஜ், பொருளாளராக டி. கலைவாணன், 5 துணைத்தலைவா்கள், 6 இயக்குநா்கள் உள்ளிட்டோா் பதவி ஏற்றுக்கொண்டனா். விழாவில், பள்ளி மாணவா்களுக்கு நோட்டுகள், எழுதுப் பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் மண்டல துணைத் தலைவா் கே. வினோத், இயக்குநா்கள் பி. பாலகுமாரன், எஸ். கமலப்பன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT