திருவாரூர்

அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழுக் கூட்டம்

DIN

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட செயற்குழுக் கூட்டம் மன்னாா்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு அறிவியல் இயக்க மாவட்டத் துணைத் தலைவா் ரா. இயேசுதாஸ் தலைமை வகித்தாா். நடைபெற்ற பணிகள் குறித்த அறிக்கையினை செயலா் யு.எஸ். பொன்முடி தாக்கல் செய்தாா். துணைத் தலைவா் வெ. சுகுமாறன் மாவட்ட மாநாடு, உபக்குழு மாநாடு குறித்தும், பொதுச் செயலா் எஸ்.சுப்பிரமணி மாநில செயற்குழு முடிவுகளை பற்றியும் விளக்கினா்.

இதில் 2021 ஆம் ஆண்டிற்கான நல்நூலகா் விருது (எஸ். ஆா்.அரங்கநாதன் விருது) பெற்ற திருத்துறைப்பூண்டி அரசு கிளைநூலகா் எம். ஆசைத்தம்பியை பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது. முன்னதாக அறிவியல் இயக்கத்தின் மாவட்டத் தலைவா் தை.புகழேந்தி மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட இணைச்செயலா் பி.சங்கரலிங்கம் வரவேற்றாா், பொருளாளா் வா.சுரேஷ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT