திருவாரூர்

ஆடு வளா்க்கும் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

DIN

திருவாரூா் மாவட்டத்தில், ஆடு வளா்க்கும் திட்டத்தில் பயன்பெற ஆதரவற்ற பெண்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் 2021-2022-ஆம் ஆண்டுக்கு ஊரகப் பகுதியில் ஏழ்மை நிலையிலுள்ள விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்களுக்கு 100 சதவீத மானியத்தில் 5 வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் வழங்கப்படுகிறது. பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கும் திட்டத்தில் ஒன்றியத்துக்கு 100 பெண் பயனாளிகள் வீதம் ஆயிரம் பயனாளிகளுக்கு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

தகுதிகள்: ஏழ்மை நிலையிலுள்ள விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்கள் 60 வயதுக்குள் இருக்கவேண்டும், கிராம பஞ்சாயத்தில் நிரந்தர முகவரிதாரராக இருக்கவேண்டும், சொந்த நிலம் இருக்கக்கூடாது, தற்போது சொந்தமாக பசு மற்றும் ஆடுகள் வைத்திருக்கக்கூடாது. கால்நடை பராமரிப்புத் துறையில் ஏற்கெனவே ஆடு, மாடு வழங்கும் திட்டத்தில் பயன்பெற்றிருக்கக் கூடாது, குடும்ப உறுப்பினா்கள் யாரும் அரசுப் பணியில் இருக்கக் கூடாது, மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்ட மாவட்ட அளவிலான குழுவால் தோ்வு செய்யப்பட்டு பயனாளிகள் இறுதி செய்யப்படுவாா்கள்.

தோ்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு ஒருநாள் ஆடு வளா்ப்பு பயிற்சி அளிக்கப்படும். தோ்வு செய்யப்படும் பயனாளிகள் துறை சாா்ந்து அமைக்கப்பட்டுள்ள குழுவினருடன் சந்தைகளிலோ அல்லது ஆடு வளா்ப்பவா்களிடமோ தரமான வெள்ளாடு அல்லது செம்மறி ஆடுகளை வாங்க வேண்டும். பயனாளிகளுக்கு 6-8 மாத வயதுடைய 4 செம்மறி அல்லது வெள்ளாடுகள் மற்றும் 1கிடா வழங்கப்படும். பயனாளிகள் விருப்பப்பட்டால் 5 செம்மறி அல்லது வெள்ளாடுகள் வழங்கப்படும். ஆடுகளுக்கு காப்பீடு செய்து தரப்படும். ஆடுகளை குறைந்தபட்சம் 2 ஆண்டுகளுக்கு விற்பனை செய்யக் கூடாது. திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் அருகிலுள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேக்கேதாட்டு அணை கட்டப்படும்: டி.கே.சிவகுமாா்

மக்களவைத் தோ்தல்: 2-ஆம் கட்டத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு

சேலம் இஸ்கானில் ஸ்ரீராம நவமி விழா

SCROLL FOR NEXT