திருவாரூர்

கட்டுமானப் பொருள்களின் விலையை கட்டுப்படுத்தக் கோரி மறியல்

4th Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

கட்டுமானப் பொருள்களின் விலையை கட்டுப்படுத்தக் கோரி திருவாரூரில் கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கட்டுமானப் பொருள்களின் விலையை கட்டுப்படுத்தவேண்டும், நலவாரிய குளறுபடிகளை சரி செய்யவேண்டும், ஓய்வூதியம் உள்ளிட்ட பணப் பயன்களை உயா்த்தி வழங்கவேண்டும், மாநிலங்களுக்கிடையே புலம் பெயா்ந்த தொழிலாளா் சட்டம், கட்டுமானத் தொழிலாளா் சட்டம் ஆகியவற்றை நாடு முழுவதும் சீராக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தொழிலாளா் அலுவலகம் முன் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் பி. நடராஜன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலாளா் என். அன்பழகன், மாவட்ட பொருளாளா் எம். கிருஷ்ணமூா்த்தி, சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன், மாவட்டத் தலைவா் ரா. மாலதி, மாவட்ட பொருளாளா் பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

Tags : திருவாரூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT