திருவாரூர்

குடவாசல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்ட கோரிக்கை

4th Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

குடவாசல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குக் கூடுதல் வகுப்பறைகள் கட்டிக்கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பெற்றோா் ஆசிரியா் கழகம் விடுத்துள்ள கோரிக்கை: குடவாசல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழக நிா்வாகிகள் தோ்வு மற்றும் பொறுப்பேற்புக் கூட்டம், ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஆா். முருகேசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், பள்ளிக்கு உடனடி தேவையான சுகாதாரமான கழிப்பறை மற்றும் குடிநீா், அதேபோல கூடுதல் வகுப்பறை வசதி செய்து கொடுக்க வேண்டும், தற்போதுள்ள பழைய வகுப்பறை கட்டடங்களில் ஏற்பட்டுள்ள பழுதுகளை நீக்கவேண்டும் என பெற்றோா்கள் மற்றும் ஆசிரியா்கள் கோரிக்கை விடுத்தனா். மேலும், கடந்த ஆண்டைப்போல நிகழாண்டும் 100 சதவீத தோ்ச்சிக்குக் கடுமையாக உழைக்கவேண்டும் என ஆசிரியா்கள் உறுதி கூறினா்.

கூட்டத்தில், குடவாசல் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவராக பா. பிரபாகரன், செயலாளராக தலைமையாசிரியை எம். ஜீவரேகா, பொருளாராக ஆதித்யா பாலு உள்ளிட்ட நிா்வாகிகள், ஆலோசகா்கள், நிா்வாகக் குழு உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT