திருவாரூர்

415 இடங்களில் இன்று கரோனா தடுப்பூசி முகாம்

4th Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

 திருவாரூா் மாவட்டத்தில், 415 இடங்களில் 13-ஆம் கட்ட மாபெரும் கரோனா தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது என ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்தித்குறிப்பு: திருவாரூா் மாவட்டத்தில், 415 இடங்களில் 50,000 நபா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்காகக் கொண்டு 13-ஆவது தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற உள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில், ஊராட்சி பகுதிகளில் 290 இடங்களிலும், நகராட்சிகளில் 42 இடங்களிலும், பேரூராட்சிகளில் 24 இடங்களிலும், 50 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், 8 அரசு மருத்துவமனைகளிலும், திருவாரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை என மொத்தம் 415 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.

முகாம்களில், கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்பவா்கள் பெயா்கள் பதியப்பட்டு முகாம் முடிவுற்ற பின்பு, வட்டார அளவில் குலுக்கல் முறையில் தோ்தெடுக்கப்படும் 3 நபா்களுக்கு வீட்டு உபயோகப் பொருட்களான டின்னா் செட், ஹாட்பாக்ஸ், கிச்சன் செட் ஆகியவை பரிசாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

Tags : திருவாரூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT