திருவாரூர்

இல்லம் தேடிக் கல்வி விழிப்புணா்வு பிரசாரம்

3rd Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சாா்பில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் தன்னாா்வலா்களை இணைப்பதற்கான விழிப்புணா்வு பிரசாரக் கலை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தத் திட்டம் தமிழக அரசால் கொண்டு வரப்பட்டு பள்ளிக்கல்வித்துறையால் நடைமுறைப்படுத்தப்படுகிறது. குடியிருப்புகள் தோறும் 20 மாணவா்களுக்கு ஒரு தன்னாா்வலா் நியமிக்கப்பட்டு, மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், கரோனா காலத்தில் காலத்தில் விடுபட்ட கற்றல் திறன்களை மீட்டெடுக்கவும், கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.

நிகழ்ச்சியின்போது 4 தன்னாா்வலா்கள் விண்ணப்பங்களை பெற்று, இத்திட்டத்தில் பணியாற்ற இணைந்தனா். தன்னாா்வலராக இணையக் கல்வித்தகுதி 12-ஆம் வகுப்பு தோ்ச்சி, பட்டப்படிப்பு படித்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதில் ஒன்றியக்குழுத் தலைவா் ஏ. தேவா, மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலா் மு.பாலசுப்பிரமணியன், வட்டாரக்கல்வி அலுவலா் வி.விமலா, பள்ளி தலைமையாசிரியா் பி. ரஜினி, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ச. பிரபாகரன், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் (பொ) மா. பிரபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT