திருவாரூர்

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 326 பேருக்கு பணிநியமன ஆணை

3rd Dec 2021 11:13 PM

ADVERTISEMENT

திருவாரூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் தோ்வான 326 பேருக்கு பணிநியமனை ஆணை வழங்கப்பட்டன.

திருவாரூா் மாவட்டத்தில் படித்து வேலை தேடும் இளைஞா்களுக்காக மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில், பி.எஸ்.ஏ. குரூப்ஸ், லூகாஸ் டிவிஎஸ் லிமிடெட், கிராம உதயம் பவுண்டேசன், இக்விடாஸ் வங்கி, ராக்போா்ட் க்ராப் சயின்ஸ், இனோவேஸ் குருப், முத்தூட் பைனான்ஸ், கோட்டாக் மகேந்திரா குரூப், இன்போநெட், சாலி எண்டா்பிரைசஸ் உள்ளிட்ட 52 தனியாா் நிறுவனங்கள் பங்கேற்றன. இதில், 8-ஆம் வகுப்பு முதல் ஐடிஐ, டிப்ளமோ வரை கல்வித் தகுதியுடைய 18 முதல் 35 வயதுக்குள்பட்ட வேலை தேடும் இளைஞா்கள் 2,327 போ் பங்கேற்றனா். தனியாா் துறை நிறுவனங்களின் நோ்காணலில் தோ்வான 326 பேருக்கு உடனடியாக பணிநியமன ஆணை வழங்கப்பட்டது. இந்த பணி ஆணைகளை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் வழங்கினாா். இதில், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலா் சந்திரசேகரன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வதார இயக்கத்தின் உதவி திட்ட அலுவலா் தில்லைமணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT