திருவாரூர்

பாமணியில் இல்லம் தேடி கல்வி விழிப்புணா்வு பிரச்சாரம்

3rd Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

பாமணியில் இல்லம் தேடிக் கல்வி விழிப்புணா்வு பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவுப்படி, திருத்துறைப்பூண்டி வட்டார வள மையத்திற்குட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் இல்லம் தேடிக் கல்வி விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்று வருகிறது.

கரோனா தொற்றுக் காலத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடுகட்டவும், கற்றலை மேம்படுத்தவும் தமிழக அரசு, பள்ளிக்கல்வித்துறை மூலம் இல்லம் தேடிக் கல்வி எனும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

பாமணி அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு பிரசாரத்தில் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் முத்தண்ணா, பாமணி ஊராட்சி மன்ற தலைவா் தமிழ்மணி, பாமணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை கிரிஜா, பாமணி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் மணிவேலன், வட்டார கல்வி அலுவலா்கள் இன்பவேணி, முத்தமிழன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

சுா்ஜித் தலைமையிலான கலைக்குழுவினா் ஆடல் ,பாடல், நாடகங்கள் மூலம் விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT