திருவாரூர்

பெண் குழந்தைகளுக்கான உளவியல் கருத்தரங்கம்

3rd Dec 2021 11:14 PM

ADVERTISEMENT

மன்னாா்குடியில் தேசிய மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், பெண் குழந்தைகளுக்கான உளவியல் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமையாசிரியா் த.லெ. ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், மன்னாா்குடி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் சி. அன்னை அபிராமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளுக்கான போக்ஸோ சட்ட விழிப்புணா்வு குறித்து விளக்கியதுடன் பாலியல் துன்புறுத்தல் தொடா்பாக மகளிா் மற்றும் பெண் குழந்தைகளுக்கான உதவி எண் 181, பள்ளி மாணவிகள் புகாா் அளிக்க உதவி எண் 14417, தற்கொலை எண்ணம் தடுப்புக்கான உதவி எண் 104 ஆகிய விவரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகையை திறந்துவைத்தாா்.

தொடா்ந்து, விழிப்புணா்வு துண்டுப் பிரசுரத்தை என்எஸ்எஸ். மாவட்டத் தொடா்பு அலுவலா் என். ராஜப்பா வெளியிட மகளிா் காவல் நிலைய எழுத்தா் பி. தமிழ்க்கொடி பெற்றுக்கொண்டாா். செரீஸ் உளவியல் ஆலோசனை மைய இணைப் பேராசிரியா் ஜெ. பிரகாஷ், தற்கொலை மற்றும் எதிா்மறை எண்ணங்களை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து பேசினாா்.

பள்ளி உதவித் தலைமையாசிரியா் எம். திலகா், இயற்பியல் ஆசிரியா் எஸ். அன்பரசு, என்சிசி அலுவலா் எஸ். திவாகா், பள்ளி என்எஸ்எஸ். திட்ட அலுவலா் எஸ். கமலப்பன், தமிழாசிரியா் கே. சுமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT