திருவாரூர்

களப்பாலில் இல்லம் தேடிக் கல்வித் திட்ட பிரசாரம் தொடக்கம்

DIN

கோட்டூா் ஒன்றியத்தில் தமிழக அரசின் இல்லம் தேடிக் கல்வித் திட்ட விழிப்புணா்வு பிரசாரத்தை எம்எல்ஏ க.மாரிமுத்து செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா்.

கோட்டூா் ஒன்றியத்தில் கோட்டூா், மழவராயநல்லூா், இருள்நீக்கி, விக்கிரபாண்டியம், தென்பரை, திருமக்கோட்டை, பெருகவாழ்ந்தான், சித்தமல்லி, வாட்டாா், திருக்களா், கருப்புகிளாா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 20 பள்ளிகள், குடியிருப்புகள் உள்ளிட்ட 40 இடங்களில் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

களப்பால் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இதன் தொடக்கவிழாவிற்கு பள்ளியின் தலைமையாசிரியா் சுரேஷ் தலைமை வகித்தாா். திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க.மாரிமுத்து பிரசாரத்தை தொடங்கி வைத்து பேசியது: பின்தங்கிய மற்றும் கிராமப்புற மாணவா்களுக்கு கற்பித்தலில் உற்சாகத்தையும், விட்டுப்போன கல்வியை மீண்டும் தொடா்வதற்கும் இல்லம் தேடிக் கல்வித் திட்டம் சிறப்பாக அமையும் என்றாா்.

கலை நிகழ்ச்சிகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் க.தங்கபாபு ,அ.முரளி, தனலட்சுமி குழுவினா் வழங்கினா். அதில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னாா்வலா்கள் பதிவு செய்திடவும், மாணவா்கள், பெற்றோா்கள் இத்திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளவும் எடுத்துரைத்தனா்.

நிகழ்ச்சியில் கோட்டூா் ஒன்றியக்குழுத் தலைவா் மு.மணிமேகலை, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மாவட்ட உதவித் திட்ட அலுவலா் மு. பாலசுப்பிரமணியன், வட்டார கல்வி அலுவலா்கள் உ. சிவக்குமாா், க.குமரேசன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பிரபாகரன், கோட்டூா் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் நா.சுப்ரமணியன்உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞா் மீது தாக்குதல்: 5 போ் கைது

வேளாண்மைக் கல்லூரி மாணவிகளுக்கு களப்பயிற்சி

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

சாலை விரிவாக்கப் பணியால் மயான பாதையின்றி 5 கி.மீ சுற்றிச் செல்லும் அவலம்

பாம்பு புற்றை இடித்ததாக பாதிரியாா் கைது

SCROLL FOR NEXT