திருவாரூர்

திருக்குவளை அண்ணா பல்கலை. பொறியியல் கல்லூரிக்கான பேருந்து சேவை துவக்கம்

11th Aug 2021 02:52 PM

ADVERTISEMENT

முன்னாள் மறைந்த தமிழக முதல்வர் மு. கருணாநிதி பிறந்த சொந்த ஊரான நாகை மாவட்டம்,  திருக்குவளையில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. 

திருக்குவளை பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் ஒரு கிலோ தூரத்திலுள்ள அமைந்துள்ள கல்லூரி வளாகத்திற்கு, மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் சென்று வர ஏதுவாக, அரசு பேருந்து சேவை துவங்க வேண்டும் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக, தினமணி செய்தி நாளிதழிலும் ஏற்கனவே செய்தி வெளியாகி உள்ளது.

இந்நிலையில் தற்பொழுது, தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, பேருந்து சேவை துவங்க வேண்டி, அனுப்பப்பட்டிருந்த மனு தமிழக முதல்வரால் உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு திருவாரூர், நாகப்பட்டினம், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருக்குவளை வரும் பேருந்துகள், திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வளாகத்திற்குள் வந்து செல்ல வேண்டுமென்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி புதன்கிழமை  கல்லூரி வளாகத்திற்கு,வந்த அரசு பேருந்தை இக்கல்லூரியின் புலமுதல்வர் எம். துரைராசன் கொடியசைத்து வைத்து துவங்கி வைத்தார்.

ADVERTISEMENT

மேலும், கல்லூரி மாணவர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதை யொட்டி  தமிழக முதல்வர், உயர்கல்வித்துறை அமைச்சர், போக்குவரத்து துறை அமைச்சர்,அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி துணைவேந்தர் மற்றும் பதிவாளர் உள்ளிட்டோருக்கு கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் மூலமாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT