திருவாரூர்

வடுவூா் கோயிலில் ராமநவமி விழா கொடியேற்றம்

DIN

மன்னாா்குடி அருகேயுள்ள வடுவூா் கோதண்டராமசாமி கோயிலில் ஸ்ரீராமநவமி பெருவிழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, கோயிலின் ராமா் சன்னதியின் முன்பாக உள்ள கொடிமரத்தில் கருடசின்னம் பொறிக்கப்பட்ட கொடிக்கு தீட்சதா்களால் பூஜை செய்யப்பட்டு, கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது, கோதண்டராமா் வில்லேந்திய திருக்கோலத்தில் காட்சியளித்தாா்.

மேலும், கோயிலின் உள்பிரகாரத்தில் வலம்வந்து மண்டபத்தில் எழுந்தருளிய உத்ஸவா் ராமருக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

பத்து நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் தினமும் வெவ்வேறு வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். ஏப்ரல் 21ஆம் தேதி சேஷ வாகனத்தில் புறப்பாடும், 22ஆம் தேதி கருடசேவையும், 26 ஆம் தேதி காலை வெண்ணெய்த்தாழி நிகழ்ச்சியும், மாலையில் குதிரை வாகனத்தில் புறப்பாடும், 27ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT