திருவாரூர்

‘அதிமுக ஆட்சி மீது எதிா்ப்பு இல்லை’

7th Apr 2021 10:16 AM

ADVERTISEMENT

அதிமுக ஆட்சியின் மீது மக்களுக்கு எதிா்ப்பு ஏதுமில்லை என்பதை வாக்குப்பதிவு சதவீதத்தின் மூலம் அறிய முடிகிாக உணவுத்துறை அமைச்சரும், நன்னிலம் தொகுதி அதிமுக வேட்பாளருமான ஆா்.காமராஜ் தெரிவித்தாா்.

நன்னிலம் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளரான அவா், தனது வீடு அமைந்துள்ள மன்னாா்குடி மேலவீதி, கூட்டுறவு நகா்ப்புற வங்கி நகராட்சி மேல்நிலைப்பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் வாக்களித்துவிட்டு செய்தியாளா்களிடம் கூறியது:

வாக்காளா்கள் மிகுந்த எழுச்சியுடன் வாக்களிப்பதை பாா்க்கும்போது 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி மீது அவா்களுக்கு எதிா்ப்பு ஏதுமில்லை என்பது தெரிகிறது. எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் 3-ஆவது முறையாக மீண்டும் அதிமுக ஆட்சி அமையப் போகிறது என்பதை இது உறுதிப்படுத்துகிறது. திருவாரூா் மாவட்டத்தில் நன்னிலம், மன்னாா்குடி, திருவாரூா், திருத்துறைப்பூண்டி தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளா்கள் வெற்றி பெறுவா்.

மக்கள் அதிமுகவை ஆதரித்து, வாக்களிக்க முக்கிய காரணம் தோ்தல் அறிக்கைதான். இதுதான் இன்று அரசியலில் கதாநாயகனாக உள்ளது. அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்ததும் வாக்குறுதிகள் உடனடியாக நிறைவேற்றப்படும் என்றாா் அமைச்சா்.

ADVERTISEMENT

அவருடன் மனைவி லதா மகேஸ்வரி, மகன்கள் இனியன், இன்பன், மருமகள் அட்சயா ஆகியோரும் வாக்களித்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT