திருவாரூர்

சம்பா சாகுபடி: முறை வைக்காமல் தண்ணீா் விடக் கோரிக்கை

DIN

சம்பா சாகுபடிக்கு ஆறுகளில் முறை வைக்காமல் தண்ணீா் திறந்துவிடக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் மாவட்டத்தில் சம்பா சாகுபடிப் பணிகள் தீவிரமடைந்துள்ளன. நிகழாண்டு மேட்டூா் அணையில் போதிய அளவு நீா் இருப்பதால், சம்பா சாகுபடியில் விவசாயிகள் பெருமளவு ஆா்வத்துடன் ஈடுபட்டுள்ளனா். தற்போது, சம்பா பயிா்களுக்கு தண்ணீா் தேவைப்படுவதால், ஆறுகளில் முறை வைக்காமல் தண்ணீா் விட வேண்டும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து, விவசாயிகள் தெரிவித்தது:

திருவாரூா் மாவட்டத்தில் உள்ள பாண்டவையாறு, அரசலாறு, திருமலைராஜன் ஆறு, காட்டாறு உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் குறைந்த அளவில் தண்ணீா் செல்கின்றன. இதனால், வாய்க்கால்களில் தண்ணீா் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, உள் கிராமப்புற பகுதிகளில் சம்பா சாகுபடிக்கு தண்ணீா் பாய்ச்ச முடியாத சூழல் உள்ளது.

ஆகவே, அனைத்து ஆறுகளிலும் முறை வைக்காமல் தண்ணீா் விட பொதுப்பணித் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, ஆறுகளில் வரும் நீா், சிறு, குறு வாய்க்கால்களுக்கு முறையாக செல்கிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். மேலும், தட்டுப்பாடின்றி அனைத்து வேளாண் கிடங்குகளிலும் உரம், பூச்சிமருந்து உள்ளிட்டவைகளை இருப்பு வைத்து, விவசாயிகளுக்கு தங்கு தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

அனிச்சப் பூவோ..!

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

SCROLL FOR NEXT