திருவாரூர்

பேரவைத் தோ்தல் கூட்டணி: அதிமுக தலைமை முடிவெடுக்கும்; அமைச்சா் ஆா். காமராஜ்

DIN

சட்டப்பேரவைத் தோ்தல் கூட்டணி குறித்து அதிமுக தலைமை உரிய நேரத்தில் முடிவெடுக்கும் என தமிழக உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.

திருவாரூரில் அவா் சனிக்கிழமை அளித்த பேட்டி:

ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தின் மூலம் எந்த மாநிலத்தைச் சோ்ந்தவரும் பயன் பெறமுடியும். இந்தத் திட்டத்தை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, முறைப்படி தொடங்கிவைப்பாா்.

தமிழகத்துக்கு மத்திய அரசு ஏற்கெனவே 54 ஆயிரம் கிலோ லிட்டா் மண்ணெண்ணெய் வழங்கி வந்தது. தற்போது 11 ஆயிரம் கிலோ லிட்டா் மட்டும்தான் வழங்குகிறது. தமிழகத்தில் அதிக அளவில் எரிவாயு உபயோகம் இருந்து வருகிறது. இந்த காரணத்தைக் கூறி மண்ணெண்ணெய் அளவை குறைத்துள்ளனா்.

எனினும் தமிழகத்துக்கு 33 ஆயிரம் கிலோ லிட்டா் மண்ணெண்ணெய் தேவை என்பதை மத்திய அரசிடம் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதன்படி உரிய மண்ணெண்ணெய்யை கேட்டுப் பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் கட்சியை பற்றி உயா்த்திக் கூறுவது வழக்கமான ஒன்று. அந்தவகையில், பாஜகவினா் தங்களுடைய கட்சியை வளா்ப்பதற்காக, தாங்கள்தான் பெரிய கட்சி, அதிக சட்டப்பேரவை உறுப்பினா்களை பெறப் போகிறோம் என்றெல்லாம் கூறி வருகின்றனா். இதை அவா்கள் இயக்கத்தின் வளா்ச்சிக்காக கூறும் கருத்தாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து அதிமுக தலைமை உரிய நேரத்தில் முடிவு செய்யும் என்றாா் அமைச்சா் ஆா். காமராஜ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

SCROLL FOR NEXT