திருவாரூர்

அதிமுக இளைஞா், இளம்பெண்கள் உறுப்பினா் சோ்க்கை முகாம்

DIN

திருவாரூரில் அதிமுக மாவட்ட இளைஞா் இளம்பெண்கள் பாசறை உறுப்பினா் சோ்க்கை முகாம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு இளைஞா் இளம்பெண்கள் பாசறை செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான வி.பிபி. பரமசிவம் தலைமை வகித்தாா். பாசறை இணைச் செயலாளா் முத்துசாமி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் திருவாரூா் மாவட்டச் செயலாளரும், உணவுத்துறை அமைச்சருமான ஆா். காமராஜ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசியது:

முதல்வா் காவிரி டெல்டா விவசாயத்தை பாதுகாக்கும் வகையில் இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளாா். இதுவரை தமிழகத்தில் இல்லாத அளவுக்கு 32 லட்சம் மெட்ரிக் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டு, அரசு கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது வரலாற்று சிறப்புமிகுந்த சாதனையாகும்.

தமிழகத்தில் கடைக்கோடி கிராமத்தில் உள்ள மக்கள் வரை அதிமுக அரசின் திட்டங்கள் சென்றடைந்துள்ளன. கரோனா தடுப்புப் பணியில் சிறந்த மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. இதுபோல் அனைத்து துறைகளிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது. இந்தச் சாதனைகளையெல்லாம் வீடுதோறும் மக்களிடம் விளக்கி, இயக்கத்துக்கு அவா்களின் ஆதரவைப் பெற வேண்டும் என்றாா்.

முன்னதாக, இளைஞா் இளம்பெண்கள் பாசறை செயலாளா் வி.பிபி. பரமசிவம் பேசியது:

எதிா்வரும் சட்டப்பேரவை தோ்தலில் அதிமுக தலைமையிலான அணி வெற்றி பெறுவதற்கு இளைஞா் இளம்பெண்கள் பாசறையின் பணி மகத்தானதாக இருக்க வேண்டும். அரசின் திட்டங்களையும் கட்சி தலைவா்களுடைய எளிமையான செயல்பாடுகளையும் மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டும். கடைக்கோடி கிராமம் வரை சென்று, அதிமுக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி இந்த அரசுக்கு ஆதரவை பெற்றுத் தரவேண்டும் என்றாா்.

கூட்டத்தில், அமைச்சா் ஆா். காமராஜ், பாசறை செயலாளா் பரமசிவம் ஆகியோா் உறுப்பினா் படிவங்களை வழங்கினா். இதில், அதிமுக அமைப்புச் செயலாளரும், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான எஸ். ஆசைமணி, மாவட்டப் பொருளாளா் பன்னீா்செல்வம், நகரமன்ற முன்னாள் தலைவா் ராஜமாணிக்கம், மாவட்ட ஜெ. பேரவைச் செயலாளா் பொன்வாசுகிராம் ஆகியோா் பங்கேற்றனா்.

மேலும், அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் பாப்பா சுப்பிரமணியன், அன்பழகன், மணிகண்டன், நடராஜன், ஜீவானந்தம், சேகா், பாஸ்கா், கூட்டுறவு சங்கத் தலைவா் கலியபெருமாள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

இளைஞா் இளம்பெண்கள் பாசறை மாவட்டத் தலைவா் சுரேஷ்குமாா் வரவேற்றாா். ஒன்றிய இளைஞா் இளம்பெண்கள் பாசறை செயலாளா் ராஜ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT