திருவாரூர்

கடன் தொல்லை: திருவாரூரில் கமலாலயக் குளத்தில் விழுந்து பெண் தற்கொலை

25th Sep 2020 07:04 PM

ADVERTISEMENT

திருவாரூரில் கடன்தொல்லை காரணமாக குளத்தில் விழுந்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.  

திருவாரூர் மாவட்டம், தியாகராஜர் திருக்கோயிலுக்குச் சொந்தமான கமலாலயக் குளத்தில், வெள்ளிக்கிழமை மாலை பெண் ஒருவர் குளத்தில் தண்ணீருக்குள் மூழ்குவதை அருகே குளித்துக்கொண்டிருந்த பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதைத்தொடர்ந்து உடனடியாக நகர காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் தீயணைப்பு துறையினர் தண்ணீரில் மூழ்கிய பெண்ணை மீட்கும் பணியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி மீட்டனர். ஆனால் அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தேவர்கண்டநல்லூர் பகுதியைச் சேர்ந்த ராஜகோபால் என்பவரது மனைவி கமலவேணி(35) என்பது தெரியவந்தது. இவர்களுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மேலும் கமலவேணி பல்வேறு நபர்களிடம் ரூ.5 லட்சம் வரை கந்து வட்டிக்கு பணம் வாங்கி மற்றவர்களுக்கு கொடுத்ததாகவும், அவர்கள் திருப்பி செலுத்தாத காரணத்தால் மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. 

இதைத்தொடர்ந்து திருவாரூர் நகர போலீசார் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கந்துவட்டி பாதிப்பு காரணமாக பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருவாரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

Tags : Thiruvarur
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT