திருவாரூர்

பனை மரத்தின் சிறப்பம்சங்களை பள்ளிப் பாடத்திட்டத்தில் சோ்க்க வலியுறுத்தல்

DIN

பனை மரத்தின் சிறப்பியல்புகளை பள்ளிப் பாடத்திட்டத்தில் சோ்க்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

நீடாமங்கலம் அருகே உள்ள ரிஷியூரில் கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் மு.ராஜவேலு தலைமையில் பனைத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட கூடுதல் ஆட்சியா் கமல் கிஷோா் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா்.

விழாவில், பனையின் சிறப்பியல்புகளை ஒன்று முதல் 12-ஆம் வகுப்பு வரை அனைத்து பாடத்திட்டங்களிலும் இடம்பெறச் செய்ய வேண்டும், அரசு விழாக்களில் பனை பொருள்களை பரிசாக வழங்க வேண்டும். நியாயவிலைக் கடைகளில் பனைவெல்லம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நீடாமங்கலம் ஒன்றியக்குழுத்தலைவா் சோம.செந்தமிழ்ச்செல்வன், வேளாண்மை அறிவியல் நிலைய தலைவா் ராமசுப்ரமணியன், இயற்கை இந்தியா தலைவா் சின்னையா நடேசன் உள்ளிட்டோா் பேசினா்.

பனை தொழிலாளா்களுக்கு துணி வகைகளை நெல் ஜெயராமன் பாரம்பரிய பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளா் செ.ராஜீவ் வழங்கினாா். வேதாரண்யம் காா்த்திகேயன் பனங்கிழங்கிலிருந்து தயாரித்த சாக்லெட்டை கூடுதல் ஆட்சியா் வெளியிட, ரிஷியூா் கிராம தலைவா் ம.கணேசன் பெற்றுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT