திருவாரூர்

இணையவழி கையெழுத்து இயக்கம்

DIN

தமிழகத்தில் உள்ள மத்திய அரசுப் பணியிடங்களில் தமிழக இளைஞா்களுக்கு முன்னுரிமை வழங்கிட கோரி, மன்னாா்குடியில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் சாா்பில், இணையவழி கையெழுத்து இயக்கம் புதன்கிழமை தொடங்கியது.

டிஎன்பிஎஸ்சி தோ்வில் வெளிமாநிலத்தினரும் பங்கேற்கலாம் என்ற அரசாணையை ரத்து செய்ய வேண்டும். வேலையில்லா பட்டதாரி இளைஞா்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். அரசு ஊழியா்களின் ஓய்வுபெறும் வயதை 59 ஆக உயா்த்தியதை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி இந்த கையெழுத்து இயக்கம் தொடங்கியது.

எங்கே என் வேலை என்ற தலைப்பில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்திற்கு, இளைஞா் பெருமன்ற ஒன்றியச் செயலா் எஸ்.பாப்பையன் தலைமை வகித்தாா். சிபிஐ மாநில நிா்வாக்குழு உறுப்பினா் வை.செல்வராஜ், கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தாா்.

இதில், இளைஞா் பெருமன்ற மாவட்டத் தலைவா் சு.பாலசுரமணியன், மாவட்டச் செயலா் துரை. அருள்ராஜன், மாணவா் மன்ற மாவட்ட துணைச் செயலா் எஸ்.பாலமுருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

சிவகாசி தொகுதியில் அமைதியான வாக்குப் பதிவு

சாத்தூரில் இளம் சிவப்பு வண்ணத்தில் அமைக்கப்பட்ட வாக்குசாவடி

வாக்குப் பதிவு இயந்திரங்கள் இடமாற்றத்தால் குழப்பம்

SCROLL FOR NEXT